பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை முதல் தொடக்கம்:

 

பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை (பிப்ரவரி 12) தொடங்கி பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நாளை (பிப்.12) தொடங்கி பிப்.17 வரை நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர். Read More Click Here