Showing posts with label cbsc board news. Show all posts
Showing posts with label cbsc board news. Show all posts

CBSE வாரியத் தேர்வு 2025: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1 முதல்! வெளியான அறிவிப்பு:

 

2025 ஆண்டுக்கான CBSE 10, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் வரும் ஜனவரி 1, 2025 அன்று தொடங்கும். பிப்ரவரி 15, 2025 முதல் எழுத்து தேர்வுகளை நடத்த வாரியம் திட்டமிட்டுள்ளது. அதற்கான விவரங்களை இங்கே பார்க்கவும்.

புதுடெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு 2025 தேதிகளை அறிவித்துள்ளது. அட்டவணையின்படி, CBSE செய்முறைத் தேர்வுகள் 2025 ஜனவரி 1, 2025 முதல் மற்றும் தியரி தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

CBSE தேர்வு 2024: "தேர்வு தேதிகளில் மாற்றம் குறித்த போலியான நோட்டீஸ்". தேர்வு வாரியம் எச்சரிக்கை.!

 

சிபிஎஸ்இ பொது தேர்வுகள் தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் குறித்து பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான தகவல்களுக்கு எதிரான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ வெளியிட்டு இருக்கிறது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. Read More Click here

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 2025 முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள் :

 

வரும் 2024 - 25ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 2025ஆம் ஆண்டு பத்து மற்றம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், இரண்டு பொதுத் தேர்வுகளை எழுதும் முதல் தொகுதி மாணவர்களாக இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. Read More Click here

10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கசிவு? - எச்சரிக்கும் CBSE .

 

image-96

மாணவர்கள்  பொய் அறிவிப்புகளை வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டால்.  உரிய சட்ட / குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பாடத்திற்கான வினாத்தாள் வெளியானதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் உண்மையில்லை என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "  நடைபெற்று வரும் 2023ம்  கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. Read More Click Here

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புக்கான தேர்வு நுழைவுச் சீட்டு:

 

10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தோவு தொடங்கவிருக்கும் நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) விரைவில் நுழைவுச் சீட்டினை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியானதும், மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதையும் படிக்க.. பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது? இரு வகுப்புகளுக்கான பொதுத் தோவுகளும் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன. Read More Click Here

10-ஆம் வகுப்பு CBSC மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.இந்த பதிவில் அனைத்து பாடங்களுக்கும் BLUE PRINT உள்ளது.இதில் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு மதிப்பெண்கள் ? எந்த பகுதியில் அதிகம் முக்கியத்துவம் தரவேண்டும்.தெளிவான விளக்கம்:

10-ஆம் வகுப்பு CBSC மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.இந்த பதிவில் அனைத்து பாடங்களுக்கும் BLUE PRINT உள்ளது.இதில் ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு மதிப்பெண்கள் ? எந்த பகுதியில் அதிகம் முக்கியத்துவம் தரவேண்டும்.தெளிவான விளக்கம் - PDF CLICK HERE

12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்... விருப்பத்தேர்வு தேதி அறிவிப்பு!


கொரோனா பரவல் காரணமாக நடப்பு ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், 10, 11, 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விகித அடிப்படையில் 12-ம் வகுப்பு மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்தது.

ஆனால், பிளஸ் 2 மதிப்பெண் மதிப்பீடு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர், மாணவா்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது சிஐசிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடா்பான அனைத்து மனுக்கள் மீது இன்று விசாரணை மேற்கொண்டது.

இதில், சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறை நியாயமானதாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருப்பதாக கூறிய உச்சநீதிமன்றம், சிபிஎஸ்இ மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், மதிப்பெண் மதிப்பிடும் முறைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தற்போது பின்பற்றப்படும், மதிப்பெண் கணக்கீட்டு முறையில் திருப்தி அடையாத மாணவர்களுக்கான விருப்பத் தேர்வுகள் 2021 ஆகஸ்ட் 15 முதல் 2021 செப்டம்பர் 15 வரை எந்த நேரத்திலும் நடத்தப்படும் என்ற சிபிஎஸ்இ திட்டத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு ஆகஸ்டில் தேர்வு-CBSC


பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் திருப்தி இல்லாதவர்களுக்கு, ஆக., 15 - செப்., 15க்குள், 'இம்ப்ரூவ்மென்ட்' எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின், பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது. 'வெயிட்டேஜ்'
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை கணக்கிடும் முறை குறித்து ஆய்வு செய்ய, 13 பேர் அடங்கிய குழுவை, சி.பி.எஸ்.இ., அமைத்தது.இந்த குழு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் அறிக்கை தாக்கல் செய்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது: பிளஸ் 2 மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ் 1 இறுதி தேர்வு மற்றும் பிளஸ் 2வில் யூனிட் தேர்வு, பருவ தேர்வு, மாதிரி பொதுத் தேர்வுகளில், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், 30:30:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் கணக்கிடப்பட்டு, 'வெயிட்டேஜ்' முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, பள்ளி முதல்வர்கள் தலைமையில் ஐந்து உறுப்பினர்களை உடைய கமிட்டியை உருவாக்கி, மதிப்பெண் மதிப்பீட்டு பணிகளை துவக்கும்படி அனைத்து பள்ளிகளுக்கும் சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது.பள்ளிகள் மதிப்பீடு செய்து வழங்கும் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய, சி.பி.எஸ்.இ., உருவாக்கியுள்ள இணையதளம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. வாய்ப்பு
இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் மதிப்பெண்களை, அடுத்த மாதம் 31ல் சி.பி.எஸ்.இ., வெளியிடும்.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சி.பி.எஸ்.இ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விபரம்:பிளஸ் 2 மாணவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்

மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு, இம்ப்ரூவ்மென்ட் எனப்படும், மதிப்பெண் அதிகரிப்பதற்கான தேர்வு நடத்தப்படும்.கொரோனா தொற்று பரவலின் நிலையை பொறுத்து இத்தேர்வு நடத்தப்படும். தற்போதைய நிலவரப்படி, ஆக., 15 - செப்., 15க்குள் இத்தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளது.

இந்த தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், cbse.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இறுதி மதிப்பெண்களாக கருதப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்கு தீர்வு காண வழி
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மதிப்பெண்களை வழங்கும் முறை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியமும், சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலும், தனித்தனியே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தன.சி.பி.எஸ்.இ., மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்யும் முறையில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில், அதற்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சி.ஐ.எஸ்.சி.இ., மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:ஆட்சேபனை இருக்கும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் எழுத்துப்பூர்வமாக மனு சமர்ப்பிக்க வேண்டும். பின், அந்த மனுவில் கூறப்பட்டுள்ள காரணம் ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில், அந்த மனு, சி.ஐ.எஸ்.சி.இ.,க்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தனித் தேர்வர்களுக்கும் தேர்வு கூடாது’ 1,152 சிபிஎஸ்இ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

தனித் தேர்வர்களுக்கும் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தக் கூடாது என 1,152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.   கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற கம்பார்ட்மென்ட் பிரிவில் உள்ள மாணவர்களும் கட்டாயம் நேரில் தேர்வு எழுத வேண்டுமென சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்நிலையில், எந்த பள்ளியிலும் பதிவு செய்யாமல் தனியாக சிபிஎஸ்இ தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மென்ட் மாணவர்கள் 1,152 பேர் சார்பில் வக்கீல் அபிஷேக் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘தற்போதைய கொரோனா சூழலில் எப்போது நேரடி தேர்வு நடத்தப்படும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. நாங்கள் தேர்வு எழுதாமல் எந்த பல்கலைக் கழகத்திலும், கல்லூரியிலும் சேர முடியாது. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் எங்களின் படிக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, எங்களையும் பள்ளி மாணவர்களாக கணக்கில் கொண்டு, நேரடி தேர்வை ரத்து செய்ய வேண்டும். மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நடைமுறையை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் :

ிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு coding பாடப் பிரிவும் கூடுதலாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 15ம் தேதி பிளஸ் 2 தேர்வு?

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh01DVZlxGvut9ymmwUcO0xSiOd1_Y9VvJETbwdnI48LItegeThcJnroaOBMQ6NFU7yLrxMRXMw9oEBePEe0IZEBA4XLQdUh53veVg_ON6ya0J87_tWBlWYpVrO5IJlg2zX4VnqJbOsdXnf/s715/images%2528135%2529.jpg

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வுகளை, ஜூலை 15ல் துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா காரணமாக பல மாநிலங்களில் இந்தாண்டு, 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப் பட்டு உள்ளது; பிளஸ் 2 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தொடர்பாக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கிடையே சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு, பிளஸ் 2 தேர்வு குறித்து விவாதிக்க உள்ளது.இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாக குழு கூடி, பிளஸ் 2 தேர்வு குறித்து விரைவில் முடிவு செய்யும். தேர்வு குறித்த அறிவிப்பு, ஜூன் 1ம் தேதி வெளியாகும்.

ஜூலை 15ல் துவங்கி, ஆக., 26க்குள் தேர்வு நடத்தி முடித்து, செப்டம்பரில் முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இதில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு வட்டாரங்கள் கூறின.

கோரிக்கை : 'ஆகஸ்டில் தேர்வுகள் முடிந்து, செப்டம்பரில் முடிவுகள் வெளியாகும் பட்சத்தில், உயர் கல்வியில் மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்படும். 'வெளிநாட்டு பல்கலைகளில் பயில்வதற்கான வாய்ப்பை மாணவர்கள் இழந்து விடுவர். அதனால், முன்னதாகவே தேர்வு நடத்த வேண்டும்' என, கல்லுாரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.

CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1 அன்று முடிவு – மத்திய அரசு தகவல்!!

CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1 அன்று முடிவு – மத்திய அரசு தகவல்!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஜூன் 1 ஆம் தேதி ஒருங்கிணைந்த முடிவு எடுக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட பல முக்கிய நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை நடத்துவது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மாநில கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது.

தமிழக தொழிற்சாலைகளுக்கு முழு ஊரடங்கில் தளர்வுகள் – வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!இந்நிலையில் பல மாநிலங்களில் இருந்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் நலன் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களும் பலர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் சிலர் மாணவர்களின் எதிர்காலம் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநில அரசு 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது மிகவும் ஆராய்ந்து தீர்வு செய்யக்கூடிய விஷயம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாநிலங்கள் இது குறித்த அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மே 25 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த முடிவு ஜூன் 1 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? பிரதமர் மோடி ஆலோசனை!


CBSE Exams 2021:10-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு! பதிவிறக்குவது எப்படி?

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய அறிவிப்பு – மாணவர்களுக்கு ஜாக்பாட்!!

 

சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முக்கிய அறிவிப்பு – மாணவர்களுக்கு ஜாக்பாட்!!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) சார்பில் நடத்தப்படும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்ற குறிப்பிட்ட பாடத்துக்கான மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள துணை தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.

G.O -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. 

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள்:

மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மே 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் கொரோனா காலத்தில் இந்த தேர்வுகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் சிபிஎஸ்இ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்இ தேர்வுகளில் மாணவர்கள் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றால் அடுத்த ஆண்டு மட்டுமே நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற முடியும். புதிய கல்வி கொள்கையின் படி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களை தவிர திறன் மேம்பாடு மட்டுமே முக்கியம்.

தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார்? புதியதலைமுறை கருத்துக்கணிப்பு வெளியீடு. 

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக அறிய வாய்ப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மறு ஆண்டு தேர்வு வரை காத்திருக்காமல் பொதுத்தேர்வு முடிந்த உடனே துணை தேர்வு எழுதி மதிப்பெண்களை உயர்த்தி கொள்ளலாம். இந்த ஆண்டு மே மாதம் நடத்தப்படும் தேர்வு மூலமாக இந்த நடைமுறை வழக்கத்திற்கு வரும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.