Showing posts with label corona virus. Show all posts
Showing posts with label corona virus. Show all posts

பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களின் வெப்பநிலையை கணக்கிட்டு பதிவு செய்யும் படிவம் PDF வடிவில் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்து நீங்கள் உங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பயன்படுத்தலாம். STUDENTS TEMPERATURE FORM PDF:

 

பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களின் வெப்பநிலையை கணக்கிட்டு பதிவு செய்யும் படிவம் PDF வடிவில் உள்ளது.இதனை பதிவிறக்கம் செய்து நீங்கள் உங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பயன்படுத்தலாம். STUDENTS TEMPERATURE FORM PDF .

 

01.11.2021 அன்று பள்ளி திறப்பதற்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்களால் பள்ளியைப் பார்வையிட்டு சரிபார்க்கப் பட வேண்டிய விவரங்கள் ( சரிபார்ப்பு பட்டியல் )PDF :

01.11.2021 அன்று பள்ளி திறப்பதற்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்களால் பள்ளியைப் பார்வையிட்டு சரிபார்க்கப் பட வேண்டிய விவரங்கள் ( சரிபார்ப்பு பட்டியல் ) PDF CLICK HERE

Corona Update - இன்றைய ( 16.08.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 ▪️தமிழகத்தில் ( 16.08.2021 ) இன்று 1,851 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1896 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 20,370

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 125

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 205  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 217

👁️‍🗨️ஈரோடு - 170

👁️‍🗨️தஞ்சாவூர் - 127

👁️‍🗨️செங்கல்பட்டு - 112

👁️‍🗨️சேலம் - 123

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.08.2021 )

.com/img/a/

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,911

▪️இன்றைய உயிரிழப்பு : 28 ( 34,519 )

▪️சென்னை மட்டும் - 4

▪️இணைநோய் இல்லாதவர் - 7

செப்டம்பரில் கொரோனா 3 ஆம் அலை, பள்ளிகள் திறப்பு – AIIMS இயக்குநர் விளக்கம்

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதையடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா 3 ஆம் அலைக்கான தாக்கம் செப்டம்பர் மாதம் முதல் துவங்குவதால் இது குறித்த கவனம் அவசியம் என AIIMS இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 

பள்ளிகள் திறப்பு

இந்தியாவில் தற்பொழுது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் தற்போது வரை கொரோனா புதிய பாதிப்புகளானது 30 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த எண்ணிக்கையானது கடந்த சில நாட்களாக சற்று ஏற்றமும், இறக்கமும் கண்டு வருகிறது. இது கொரோனா 3 ஆம் அலைக்கான ஆரம்பம் என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் பல மாநிலங்களில் கொரோனா முழு ஊரடங்கு தளர்வில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3 ஆம் அலைக்கான தாக்கம் ஏற்படும் என்பதால் பள்ளிகள் திறப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற நுரையீரல் நிபுணரும், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (AIIMS) இயக்குநருமான டாக்டர் ரன்தீப் குலேரியா, இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், ‘இந்தியாவில் செரோ கணக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஆன்டிபாடிகள் அதிகளவு உற்பத்தியாகியுள்ளன.

ஆனால் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனவால் எளிதில் பாதிக்கப்படுகிகின்றனர். இந்த ஆன்டிபாடிகள் காலப்போக்கில் குறைவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களுக்கு இந்த ஆன்டிபாடி எண்ணிக்கையானது வெகுவாக குறையும். இருப்பினும் கொரோனாவின் 3 ஆம் அலை, இதற்கு முந்தைய பதிப்புகளை போல மோசமாக இருக்காது. இப்போது தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அடுத்த அலை உருவானாலும் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தாது.

இந்தியாவை பொருத்தளவு மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நோய் தொற்று அதிவேகமாக பரவுகிறது. இதனிடையே தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் ஒரு இடத்தில அதிகமாக இருக்கும் பட்சத்தில், இதுவரை கொரோனவால் பாதிக்கப்படாதவர்கள் கூட 3 ஆவது அலையின் போது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மூன்றாவது அலை எப்போது உருவாகும் என்று உறுதியாக கணிக்க முடியாது. ஒருவேளை 3 ஆம் அலை உருவாவதற்கு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம். தற்போது வரை கொரோனா 2 ஆம் அலை தாக்கம் முழுமையாக குறையவில்லை.

அதனால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 3 ஆம் அலை உருவாகக்கூடும். இதுவரை குழந்தைகளுக்கான தடுப்பூசி போடப்படவில்லை. அதனால் இனி மேலும் நோய் தொற்று அதிகமானால் அதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான். இதற்கிடையில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் கடந்த ஒன்றரை வருடங்களாக குழந்தைகளது கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு 5%க்கும் குறைவான பாதிப்பு உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யலாம். வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாகவே குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் போடப்படலாம். இது நம்பிகையளிக்க கூடிய விஷயமாகும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் :

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்  4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்:

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 60 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது 44,924 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 7,661 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 83 ஆயிரத்து 624 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 148 பேர் உயிரிழந்துள்ளனர். 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6, 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் :

 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,162 பேருக்கு கொரோனா உறுதி.

இன்று ஒரே நாளில் 155 பேர் உயிரிழப்பு.

கொரோனாவில் இருந்து 9,046 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50,000-க்கும் கீழே குறைந்தது.

சென்னையில் 372 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்.


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்:

 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்:

 


நாளை முதல் ஜுன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிப்பு.ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகள் தொடரும் புதிய தளர்வுகள் இந்த 11 மாவட்டங்களில் இல்லை

அளிக்கபட்டுள்ள தளர்வுகள் என்ன:

பேருந்துகள் இயக்க அனுமதி

மெட்ரோ ரயில் இயக்க அனுமதி

மேலும் முழு விவரங்களுக்கு:

TN gov Press News 20.06.2021 - Download here...


IMG_20210620_130214

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்:

 தமிழகத்தில் இன்று 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 287 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். நேற்று கொரோனா மரணம் 210-ஆக குறைந்த நிலையில் இன்று மீண்டும் கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 19,860 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.




தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 17.06.2021

 தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 17.06.2021


தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் விவரம் 17.06.2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 88 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது 1,14,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 21,058 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 44 ஆயிரத்து 073 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 270 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30
ஆயிரத்து 338 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




BREAKING: தமிழகம் முழுவதும் நாளை முதல்.. அரசு அதிரடி அறிவிப்பு..!!!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புகளும் உயிரிழப்புகளும் புதிய உச்சத்தை தொட்டு தற்போது படிபடியாக குறைந்து வருகிறது. இதில், பல குழந்தைகள், இந்தக் கொரோனா பாதிப்பால் தங்களது தாய் - தந்தையை இழந்து தவித்து வருகின்றன. அந்தவகையில் பெற்றோரை இழந்து அனாதைகளாக்கப்படும் குழந்தைகளைக் காக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலராலும் வைக்கப்பட்டு வந்தது. 

இதனைத்தொடர்ந்து குழந்தைகளின் நலன் கருதி தமிழக அரசு, கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும் என்றும் அண்மையில் அறிவித்தது.  

இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் வைப்பு நிதியாக ரூ.5 லட்சம் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு:

தமிழகத்தில் ஜூன் 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு:

கரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
• அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.
• வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட
அனுமதிக்கப்படும்.
• கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
•  செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள்  விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
• மிக்ஸி, கிரைண்டர், டி.வி. பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
செயல்பட அனுமதிக்கப்படும்.
• பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.
• ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
• தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
• தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்று வர அனுமதிக்கப்படுவர்.
• தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவிகிதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
• வீட்டு வசதி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
 

பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்