Ennum Ezhuthum-1 to 5 std- 2nd term Direct training- reg
👇👇👇👇👇
Ennum Ezhuthum-1 to 5 std- 2nd term Direct training- reg
👇👇👇👇👇
🔰 எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ இணையவழி பயிற்சிக்கான கட்டகங்கள்
🔅 1 -3 வகுப்புகள்
🔅 4&5 வகுப்புகளுக்கு
தனித்தனியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது
🪷 ஆசிரியர்கள் பயிற்சியை மேற்கொண்டு இறுதியில் QUIZ & FEEDBACK UPDATE செய்ய வேண்டும்.அதற்கான வழிமுறை-
READ MORE CLICK HERE
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - குழுக்களை வலுப்படுத்துதல் - பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட முதன்மைக் கருத்தாளர்களுக்கானப் ( District Training Unit ) மண்டல அளவிலான 2 நாள் பயிற்சி வழங்குதல் , நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முகள்
SMC - DTU Zonal Training Proceedings -reg - Download here
CRC
: 6-8 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று நாட்கள்
வட்டார வளமையக் கூட்டம் - Training Schedule & SCERT Proceedings
Block Level CRC Training 25.07.2023 -27.07.2023 - Proceedings - Download here...
2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்தன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினி பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021 க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவை புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , HI - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் 2.8.2021 முதல் 6.8.2021 வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சியானது பல கட்டங்களாக ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
5.8.2021 அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் , முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு 9.8.2021 அன்று முதல் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி 12.08.2021 . 13.08.2021 . 16.08.2021 முதல் 18.08.2021 வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே , பயிற்சி நன்முறையில் நடைபெறுவதற்கு தேவையான ஆயத்த பணிகள் அனைத்தையும் மாவட்டங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இதற்காக 26.7.2021 முதல் 30.7.2021 வரையில் நடைபெற்ற கருத்தாளர் பயிற்சியிலிருந்து 264 கருத்தாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் . இரு கருத்தாளர்கள் இணைந்து ஒரு குழுவாகும். ஒவ்வொரு கருத்தாளர் குழுக்களும் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். தெரிவு செய்யப்பட்ட 264 கருத்தாளர்களின் பெயர் பட்டியல் 132 கருத்தாளர் குழுக்களாக பிரிக்கப்பட்டு இணைப்பு 1 - ல் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரமும் இணைப்பு 2 - ல் கொடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 12500 முதுநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படவுள்ளதால் , 125 கருத்தாளர் குழுக்கள் மட்டும் போதுமானதாகும் , கொடுக்கப்பட்டுள்ள கருத்தாயார் பட்டியலில் கோயமுத்தூர் , தருமபுரி , ஈரோடு , மதுரை , புதுக்கோட்டை சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மட்டும் கூடுதலாக இரு கருத்தாளர்கள் ( ஒரு குழு ) உள்ளனர் . எனவே , மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் மட்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே கொடுக்கப்பட்டுள்ள கருத்தாளர் பட்டியலிலிருந்து மாவட்டங்களுக்கான கருத்தாளர்களை தெரிவு செய்து கொள்ளவேண்டும்.