Showing posts with label TNPSC RESULT. Show all posts
Showing posts with label TNPSC RESULT. Show all posts

TNPSC - குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது

IMG_20250506_081607
 

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள : tnpsc.gov.in  

குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது TNPSC நிர்வாகம்

56 வேலை நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


செம வாய்ப்பு…! வரும் 8-ம் தேதி முதல் குரூப் 4 தேர்வுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பு…! முழு விவரம் :

 


சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. READ MORE CLICK HERE

TNPSC Group 4 Cut Off 2024 [Expected]

 

 TNPSC Group 4 Results 2024 cut off marks

Tamil Nadu Public Service Commission (TNPSC) has announced TNPSC Group 4 Results 2024 on 28 October, 2024. Along with the result, TNPSC Commission has released TNPSC Group 4 cut off 2024. You can check the TNPSC Group 4 Results 2024 cut off marks in the table below. READ MORE CLICK HERE

TNPSC Group 2, 2A Exam: குரூப் 2 தேர்வில் 2347 பணியிடங்கள் பதவிகள் வாரியான முழு விவரம் இங்கே:

 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன?

ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம். READ MORE CLICK HERE

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1பி, 1சி தேர்வு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

 

மிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1பி, குரூப் 1சி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதில் மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Read More Click Here

TNPSC GROUP IV - தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

 


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! Read More Click Here

காவலர் பணி தேர்வு முடிவு வெளியீடு:

 

காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு இரண்டாம் நிலை காவலர்களாக 3,356 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 8ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. Result Click Here

TRB BEO Exam - Block Educational Officer Result 2023 Published

TN%20TRB%20BEO%20EXAM%20RESULT

 

Direct Recruitment of Block Educational Officer in Elementary Education for the year 2019-2020 to 2020-2022.

PUBLICATION OF EXAMINATION RESULTS

As per the Notification No.01/2023 dated 05.06.2023 and Corrigendum notification 01(A)/2023 dated 16.06.2023, the written Competitive Examination for the Direct Recruitment of 33 Block Educational Officer was held on 10.09.2023. A total No. of 42716 candidates applied for the written Examination and 35403 candidates appeared for the Written Examination.

Results Click Here

TNPSC - குரூப் 4 பணி நியமன கவுன்சிலிங் அறிவிப்பு :

 

'குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன கவுன்சிலிங், வரும், 20ம் தேதி துவங்கும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

'குரூப் 4' பதவிகளில் காலியாக உள்ள, 10,178 இடங்களை நிரப்ப, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வழியாக, கடந்த ஆண்டு ஜூலை, 24ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

Read More Click Here

TNPSC - துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..

2023 ஆம் ஆண்டு மே மாத துறைத்தேர்வுக்கான அறிவிக்கையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15,04.2023 பிற்பகல் 11:59 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, நிர்வாக காரணங்களுக்காக துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.04.2023 பிற்பகல் 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. Read More Click Here

 

TNPSC - குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு - ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு!

 குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு நடக்கிறது. 5,529 பதவிக்கு நடத்தப்படும் தேர்வை சுமார் 58 ஆயிரம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு மே 21ம் தேதி நடத்தியது. இத்தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சத்து 78,163 பேர் மட்டுமே தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்தனர். இருந்தபோதிலும், முதல்நிலை தேர்வை 84.4 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர். Read More Click here

TNPSC - 1083 காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது.

 

.com/

1083 காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083 காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிபிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மார்ச் 4 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. Read More Click Here

TNPSC : குரூப் - 2 தேர்வு சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி அறிவிப்பு.

 

'குரூப் - 2' முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழை, வரும் 16ம் தேதி வரை, 'இ - சேவை' மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், மே 21ல் குரூப் - 2, 2ஏ தேர்வு நடந்தது. முதல் நிலைத் தேர்வு முடிவுகளின்படி, முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் அசல் சான்றிதழ்களை, வரும் 16ம் தேதி வரை, இ - சேவை மையங்கள் வழியாக, பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. Read More Click Here

குரூப்-1 டிப்ஸ்: இந்திய பொருளாதாரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ:

 

TNPSC Exam Preparation: குரூப் 1 பதவிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதில் இந்திய பொருளாதாரத்தில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் இடம் பெறுவது வழக்கம். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பலனைடையும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார்மயம்(Disinvestment) தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. Read More Click Here

TNPSC Group - II தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

 


குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி லட்சக் கணக்கைக்கான தேர்வர்களிடம் காணப்படுகிறது.

தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. Read More Click Here

தமிழ்நாடு அரசு பணியாளர் TNPSC செயலாளராக முன்னாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நியமனம்!

 தமிழ்நாடு அரசு பணியாளர் TNPSC செயலாளராக முன்னாள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நியமனம்!

IMG_20210616_174632

Proceedings No.26-08/PD-A2/2021, dated 15.06.2021 Present: Thiru Ka. Balachandran, I.A.S. (R), Hon'ble Chairman,

Tamil Nadu Public Service Commission, Chennai - 600 003.

Sub: Personnel Department - Tamil Nadu Public Service Commission Secretary, Tamil Nadu Public Service Commission, Appointment Orders Issued - Regarding

Ref: D.O. Letter No.738/A1/2021, Public (Special A) Department, dated 15.06.2021 from the Chief Secretary to Government, Secretariat, Chennai - 600 009.

ORDER: 

Under Regulation 8 (1) of the Tamil Nadu Public Service Commission Regulations, 1954, with the prior approval of His Excellency, the Governor of Tamil Nadu, Tmt. P. Uma Maheswari, I.A.S., formerly Collector, Pudukkottai District is appointed as Secretary, Tamil Nadu Public Service Commission Chennai-600 003, vice Thiru. K. Nanthakumar, I.A.S., with effect from the date of her assuming charge of the post.

பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது:

பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக முதலாம், மூன்றாம், ஐந்தாம் மற்றும் ஏழாம் பருவ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது: PDFLK HERE

தேர்வில் முறைகேடு? - டி.என்.பி.எஸ்.சி மீது மீண்டும் புகார் :

1-111

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தேர்வில் டிஎன்பிஎஸ்சியின் அணுகுமுறை மீது மீண்டும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. புதிய அரசு இதில் தலையிட்டு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு இரண்டிற்கான எழுத்துத் தேர்வு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி நடந்தது. இதில், வெறும் 33 பேரை மட்டும் தேர்வு செய்ததாக 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், 1,328 பேர் தேர்வு எழுதியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் காசி மாயன் கேட்டபோது, 1,392 பேர் என்று தகவல் அளிக்கப்பட்டது. 33 பேர் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், 1,289 என டிஎன்பிஎஸ்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது.


தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் என்ற குழப்பம் இப்போது வரை தீர்க்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் 33 பேர் தேர்வு செல்லாது என்றும், மீண்டும் சரியான முறையில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவிற்குப் பின்பு, ஏற்கனவே தேர்வு எழுதியவர்களில் இருந்து 226 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், வரும் ஜூன் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு இந்த அறிவிப்பில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த 226 பேரும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் செல்லாது என நிராகரிக்கப்பட்ட 33 பேரில், 6க்கும் மேற்பட்டவர்கள் இந்த 226 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

விதிமுறைகளின்படி வெறும் அப்ரென்டிஷிப் மட்டுமே முடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும். அப்போதுதான் தேர்வு செய்யப்பட முடியும். ஆனால், தற்போது தேர்வு செய்யப்பட்ட 226 பேரில் சிலர், வெறும் அப்ரென்டிஷிப் மட்டுமே முடித்தவர்களாக உள்ளனர் என்பதும் ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்திருக்கிறது

மேலும் ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் அதிக சம்பளம் வாங்குவோர், அதை விட 50 சதவீதம் குறைவான இந்தப் பதவிக்குத் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்ட 226 பேரில் இடம் பெற்றுள்ளனர்

இந்தச் சூழலில், இந்தத் தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகும் குளறுபடி தொடர்வதாகவும், தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குமுறுகின்றனர் தேர்வர்கள்.

மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு இரண்டிற்கான தேர்வினை மீண்டும் நடத்தி, தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய புதிய அரசு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்பதே தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.

சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: யூபிஎஸ்சி அறிவிப்பு :

நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்வை நடத்தும் யூபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆட்சிப் பணியின் முக்கியத் தேர்வுகளான ஐஏஎஸ் (Indian Administrative Service), ஐஎஃப்எஸ் (Indian Foreign Service), ஐபிஎஸ் (Indian Police Service) தேர்வுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

நாட்டில் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கோவிட் தொற்றால் தினசரி பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பகுதியளவு ஊரடங்கை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றன. அதேபோல மத்திய அரசின் பல்வேறு நுழைவு, போட்டித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக, தேர்வை நடத்தும் யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நாட்டில் கரோனா பரவல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்வதற்காக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வர்கள் பயணிக்க வேண்டி உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்வுக்குக் குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்னதாகப் புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.

தேர்வர்கள் மற்றும் தேர்வு நடத்துவோரின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான விவரங்களை அறிய யூபிஎஸ்சி இணையதளத்தைத் தொடர்ந்து தேர்வர்கள் பார்க்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பலமுறை தள்ளி வைக்கப்பட்ட ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. முதன்மைத் தேர்வுகளும் நடைபெற்ற நிலையில், நேர்முகத் தேர்வுகள் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.