Showing posts with label EDUCATIONAL NEWS. Show all posts
Showing posts with label EDUCATIONAL NEWS. Show all posts

ஜாக்டோ - ஜியோ முதல்வருடன் திடீர் சந்திப்பு.


IMG-20220817-WA0010

நேற்று 16.08.22 காலை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப் பாளர்கள் இரா.தாஸ், கு.தியாகராஜன், கு.வெங்கடேசன் ஆகியோர் சந்தித்து 17 நிமிடங்கள் பேசினார்கள். Read More Click Here

 

செஸ் ஒலிம்பியாட் துவக்க நாள் 28 ம் தேதி சென்னை ,திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுவிடுமுறை அறிவிப்பு

செஸ் ஒலிம்பியாட் துவக்க நாள் 28 ம் தேதி சென்னை ,திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுவிடுமுறை அறிவிப்பு அரசாணைக்கு இங்கு - PDF CLICK HERE

குடும்பதலைவிகளுக்கு #மாதம்_1000ரூபாய்_வழங்கும் திட்டத்தில் எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்கும் என்பதில் பொதுமக்களுக்கு குழப்பம் உள்ளது.. இதனை சரிசெய்யும் பொருட்டு படியிங்கள் :

குடும்பதலைவிகளுக்கு #மாதம்_1000ரூபாய்_வழங்கும் திட்டத்தில் எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்கும் என்பதில் பொதுமக்களுக்கு குழப்பம் உள்ளது.. இதனை சரிசெய்யும் பொருட்டு படியிங்கள் :
தமிழ்நாடு அரசு குடும்ப ரேஷன் கார்டுகளை ஐந்து வகையாக பிரித்துள்ளது.

1)PHH=priority house hold.
2)PHH-(AAY)=Antyodaya Anna yojana.
3)NPHH=non priority house hold.
4)NPHH -(S)=no rice, only sugar
5)NPHH-(NC)=only use id card

I)PHH=அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களையும் பெறலாம்.

2)PHH-(AAY)=இதை Bpl கார்டு என்றும் சொல்வர்.( Below poverty line)வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளோர்க்கு வழங்கப்படும்.. அத்தியாவசிய பொருள்களுடன் மாதம் 35கிலோ அரிசி வழங்கபடும்.

3)NPHH=இதை Apl கார்டு எனவும் சொல்வர். (Above poverty line ). முன்னுரிமை இல்லாதவர்கள், ஆனால் அனைத்து அத்தியாவசிய பொருள்களும், அரிசியும் உண்டு.

4)NPHH-(S)=இந்த கார்டுக்கு அரிசி கிடையாது. சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருள்கள் உண்டு.

5)NPHH-(NC)=எந்த பொருளும் கிடையாது. அடையாள அட்டையாக மட்டும் பயன்படுத்தலாம். பெரும்பாலும் இதை வசதி படைத்தவர்கள் வாங்கி வைத்து கொள்வார்கள்.

மேல்சொன்ன ரேஷன் கார்டுகளில் முதல் மூன்று PHH, PHH(AAY), NPHH, கார்டுகளுக்கு மட்டும் #1000ரூபாய்_உரிமைத்தொகை  கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை! :

IMG_20210629_081758 

நாங்கள் நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி  ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 ல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் ச‌ரிபார்ப்பில்       கல‌ந்து கொண்டோம். ஆசிரியர் தேர்வு வாரியமான‌து தேர்வு எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை 15.07.2019 க்குள் பெற்றிருக்க வேண்டும் என‌ அறிவிப்பில் வெளியிடப்பட்டு இருந்தது. நாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தேர்வு முடிவுகள் 15.07.2019 க்கு முன்பாகவே வெளியிடப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட கல்வித் தகுதியினை நாங்கள் அனைவரும் Cut off  date 15.07.2019 க்கு முன்னரே பெற்றுள்ளோம்.  ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவின்படி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட‌ நாட்களான 29.10.2019 - 01.11.2019  க்குள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ததுடன் 08.11.2019 மற்றும் 09.11.2019 அன்று நடைபெற்ற‌ சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அனைத்து சான்றிதழ்களையும்  சமர்ப்பித்தோம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது முதுகலைப் படிப்பு Cutoff date 15.07.2019 க்கு பிறகு  முடித்த‌தாகக் கூறி எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை.

எனவே இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் ஏற்காததால்   மாண்புமிகு சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் (Writ Petition)  நாங்கள் அனைவரும் தகுதி உடையவர்கள் (Eligible Candidate) என‌ தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பின் அடிப்படையில் எங்களில் மூன்று நபர்கள் மட்டும் 09.02.2020 மற்றும் 10.02.2020 அன்று பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பெற்ற‌ கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கான பள்ளியையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.  இத்தீர்ப்பினை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் தொடுத்த மேல்முறையீட்டு மனு (Writ Appeal) மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஆசிரியர் தேர்வு வாரியமானது எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் 2 ஆண்டுகளாக‌ காலம் தாழ்த்தி வருகிறது.  

தகுதியான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும் முறையாக சான்றிதழ் சமர்ப்பித்தும், மாணவர்களின் அறிவுக்கண்களை திறக்கும் ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்த நாங்கள் இந்த அசாதாரமாண சூழ்நிலையில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த மன‌ உளைச்சலில் இருந்து வருகிறோம்.   மாண்புமிகு கல்வி அமைச்சர் ஐயா அவர்கள் எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து பணி நியமன ஆணை வழங்க வழிவகை செய்யுமாறு பணிந்து தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

Breaking News: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும் நாள் அறிவிப்பு- உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு :

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ஜூலை 31ம் தேதிக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் கல்லூரிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் தனியார் பள்ளிகளும் ஜூலை 31-ம் தேதிக்கு பிறகுதான் மாணவர் சேர்க்கை துவங்க வேண்டும் என்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் சலுகையை மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டம் சிபிஎஸ்இ பிரிவு மாணவர்கள் மதிப்பெண் விவரங்கள் வந்த பிறகுதான் மாணவர் சேர்க்கையை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி போலியானது என மத்திய அரசு விளக்கம் :

A document is doing rounds on social media claiming resumption of DA to Central Government employees & Dearness Relief to Central Government pensioners from July 2021. 𝗧𝗵𝗶𝘀 𝗢𝗠 𝗶𝘀 #𝗙𝗔𝗞𝗘. 𝗡𝗼 𝘀𝘂𝗰𝗵 𝗢𝗠 𝗵𝗮𝘀 𝗯𝗲𝗲𝗻 𝗶𝘀𝘀𝘂𝗲𝗱 𝗯𝘆 𝐆𝐎𝐈.

IMG-20210626-WA0167

IMG-20210626-WA0163

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் :

.com/

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போது செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.

மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்றும், மேலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Plus Two - மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு:உங்கள் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளுங்கள் :

 மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு:

10 ஆம் வகுப்பு

உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண் 70,80,90 எனக்கொண்டால் இவற்றின் சராசரி, அதாவது மூன்றையும் கூட்டி மூன்றால் வகுக்க கிடைப்பது 80 ஆகும். 

mark%252Bp2

இந்த 80 இல் 50 சதவீதம் 40 ஆகும். இந்த 40 மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாட மதிப்பெண்ணுக்கும் கூட்டிக்கொள்ள வேண்டும்.

11ஆம் வகுப்பு

தமிழில் பெற்ற மொத்த மதிப்பெண் 90 எனில் அக மதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் உள்ளது 80 ஆகும். இதில் 20 சதவீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 80 ஐ 5 ஆல் வகுத்துக் கொள்ள வேண்டும். அப்படியெனில் 16 ஆகும். அதாவது 12 ஆம் வகுப்புக்கு தமிழ் பாடத்தில் சேர்க்க வேண்டிய மதிப்பெண் 16 ஆகும். இதே போன்று ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட வேண்டும்.

IMG-20210627-WA0003


12 ஆம் வகுப்பு

இதில் செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 20 + அக மதிப்பீட்டு மதிப்பெண்ணுக்கு 10 என மொத்தம் 30 மதிப்பெண் எடுத்துக்கொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வு இல்லாத படங்களுக்கு அந்தந்த பாடத்திற்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டு மதிப்பெண்ணை மூன்றால் பெருக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒருவருக்கு தமிழ் பாடத்தில் அக மதிப்பீட்டு மதிப்பெண் 8 வழங்கப்பட்டது எனில் அவருக்கு 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்திற்கு 8×3=24 என எடுத்துக்கொள்ள வேண்டும்.

12 ஆம் வகுப்பிற்கு மதிப்பெண் வழங்கும் முறை

உதாரணமாக தமிழ் பாடத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

பத்தாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண்  40, பதினோன்றாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 16, பண்ணிரண்டாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 24 ஆகிய  அனைத்தையும் கூட்ட கிடைப்பது 40+16+24=80. எனவே 12 ஆம் வகுப்பிற்கு அவருக்கு தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண் வழங்கப்படும். இதே முறையை அனைத்து பாடங்களுக்கும் பின்பற்றவும்.

பள்ளி திறப்பு குறித்த ஆலோசனை எப்போது? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி :

.com/

கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகே, பள்ளி திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன்லைன் வகுப்பிலேயே சென்றுவிட்டன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருந்த தமிழக அரசு, இரண்டாம் அலையின் தீவிரத்தால் அந்த முடிவை கைவிட்டது. தற்போது பாதிப்பு குறைந்து இருக்கும் நிலையில் பள்ளிகள் திறக்கப் படுமா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

தெலுங்கானாவில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களும் இதனை பின்பற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான், ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

முதலில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கிய பின்னர் படிப்படியாக பிற வகுப்புகளுக்கு தொடங்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், கொரோனா தொடர்பாக பெற்றோர்களின் அச்சம் குறைந்து பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். முதல்வர் உத்தரவு பிறப்பித்தால் பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

IMG-20210624-WA0001



விரைவில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதற்கு மத்திய அரசிடம் நிபுணர்கள் பரிந்துரை :

மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வந்து படிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்க்குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

குறைந்த அளவிலான மாணவர்கள் வரும் வகையில் நேரத்தை மாற்றியமைத்தும் குறைத்தும் ஒருநாள் விட்டு ஒருநாளும் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா இரண்டாவது அலை பின்வாங்குவதால் பல்வேறு மாநில அரசுகளும் பள்ளிமற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் முழு அளவில் ஊரடங்கு நீக்கப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. ஜூலை 1 முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால் இங்குள்ள கல்லூரிகள் மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதிலும் ஈடுபட்டுள்ளன

தாமத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும்

தாமதமாக பணிக்கு வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களை, பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.

பல பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் சுழற்சி முறை ஆசிரியர்கள், பணிக்கு தாமதமாக வருவதால், சேர்க்கைக்காக வரும் மாணவர்களும், பெற்றோரும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தவும், தாமதமாக வரும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்துள்ளனர்.ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.

எனவே, தலைமை ஆசிரியர்கள் காலதாமதமாக பணிக்கு வரக்கூடாது.சேர்க்கைக்கு வரும் மாணவ - மாணவியரை காத்திருக்க வைக்கக் கூடாது. காலை, 9:15 மணிக்குள் பள்ளியில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.காலதாமதமாக பணிக்கு வரும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி அலுவலகங்களில், நியமனம் ஓரிடம்; வேலை வேறு இடம் என்று இருந்தவர்களின் மாற்றுப் பணி உத்தரவுகள், அதிரடியாக ரத்து

பள்ளி கல்வி அலுவலகங்களில், நியமனம் ஓரிடம்; வேலை வேறு இடம் என்று இருந்தவர்களின் மாற்றுப் பணி உத்தரவுகள், அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா அனுப்பி உள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வி துறை அலுவலகங்களில், பல்வேறு பதவிகளில் மாற்றுப் பணி உத்தரவு பெற்று, பலர் பணியாற்றி வருகின்றனர்.மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் ஆகியோர், இதுபோன்ற மாற்றுப் பணிகளில் பணியாற்றுகின்றனர்.

அவர்களின் மாற்றுப் பணி உத்தரவு, நிர்வாக நலன் கருதி ரத்து செய்யப்படுகிறது. மாற்றுப் பணியில் உள்ளவர்கள் உடனே அந்த பணியில் இருந்து விடுவிப்பு பெற்று, தங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட, ஊதியம் பெறும் அலுவலக பணியில் சேர அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு.

.com/
 

கிராமப்புறங்களில் வசிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன் டிஜிட்டல்' வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி வசதி கிடையாது

தமிழக பெண்கள் இயக்கத்தின் செயலர் எஸ்.வாசுகி தாக்கல் செய்த மனு:அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு, போதிய நிதி வசதி கிடையாது. ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வசதியாக, அவர்களால், கணினி, மொபைல் போன் வாங்க முடியாது.தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், தவறாமல் ஆன்லைனில் பயிற்சி பெறுகின்றனர்.

ஏழை, விளிம்புநிலை மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில், டிஜிட்டல் வகுப்பு அறைகளை, பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தகுதியானவர்களை நியமித்து, கண்காணித்து இருக்க வேண்டும்.எனவே, பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கிய மக்கள் வசிக்கும் கிராமப் புறங்களில், குடிசைப் பகுதிகளில், ஆன்லைன் டிஜிட்டல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும்.

மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை அமைத்து, பள்ளி கல்வியை மாணவர்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.முதல் பெஞ்ச்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜரானார். மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்த நாணயம் உங்க கிட்ட இருக்கா.? ஈஸியா 10 லட்சம் பெறலாம்.. எப்படி தெரியுமா.??

பழைய பொருட்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். ஒரு சிலர் பழைய பொருட்களை சேர்த்து வைப்பார்கள். அதைப் போல பழைய நாணயங்களை சேர்த்துவைப்பதன் மூலம் சில சமயம் பெரும் பணக்காரர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் நீங்கள் சேர்த்து வைத்த நாணயத்தில் மாதா வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் 2002 இல் பொறிக்கப்பட்டவையாக இருந்தால் அதைக் கொடுத்து 10 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.

இந்த நாணயங்களை ஆன்லைன் இணையதளங்கள் மூலமாக ஏலம் விடலாம். அதற்கான வலைதள முகவரி இதோ: https://dir.indiamart.com/impcat/old-coins.html, https://in.pinterest.com/080841052o/sell-old-coins/, https://www.indiancurrencies.com/ இந்த வலைதளங்களில் நீங்கள் பதிவு செய்து விட்டு பின்னர், நீங்கள் வைத்திருக்கும் நாணயத்தைப் பதிவேற்றம் செய்தால் மிக எளிதாக ரூ.10 லட்சம் வரை பெற முடியும்.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறப்பு? கல்வித்துறை விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தற்போது முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த இரண்டு வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 14ம் தேதி முதல் குறிப்பிட்ட மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள் நிர்வாக பணிகளுக்காக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தற்போது 2021-22 புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளுக்கும் இலவச புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற ஜூலை மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது வரை அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்பதால் பள்ளி மாணவர்கள் அனைவரும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து இலவச பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிக்கை மூலம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் தாமதம் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு:


மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை ஹைகிரவுண்ட் மு.ந.அப்துர் ரஹ்மான் மேல் நிலைப்பள்ளி தாளாளர் முகமது நாசர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் பயில்கின்றனர். 18 ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர்.

2019-ல் பள்ளிக்கல்வித்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 வகுப்புகளில் தமிழ் வழி பிரிவுக்கு இணையாக ஆங்கில வழி பிரிவு தொடங்க அனுமதி வழங்கியது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பிரிவு தொடங்கப்பட்டது.

ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும், அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததை ரத்து செய்யவும், பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி கோரி முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவை ரத்து செய்து ஆங்கில வழி பிரிவுக்கு ஆசிரியர் நியமனத்துக்கும், கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பினேகாஸ் வாதிட்டார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

ஒவ்வொரு பள்ளியையும் தனி அலகாக கருத வேண்டும். 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் இருக்க வேண்டும். ஆசிரியர் நியமனம் தொடர்பாக மனு அளிக்கும் போது, அந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர் எண்ணிக்கையை சமன் செய்யத பிறகே புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மனுதாரர் அனுப்பிய மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நியமனம் செய்வது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!

 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

.com/

ஸ்மார்ட் போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்கள் எத்தனை பேர்? என்று மாவட்ட வாரியாக தகவல் திரட்டி ஒப்படைக்குமாறு சமக்ரா சிக்‌ஷாவின் மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!

Online Class Survey Form - Download here...