பிப்.15-ல் அடையாள வேலை நிறுத்தம்; 26 முதல் காலவரையற்ற போராட்டம்: ஜாக்டோ ஜியோ :

 

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மதுரையில் இன்று ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது.

கடந்த 1.04.2003-க்குப் பின் அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளிலுள்ள 30 சதவீத காலிப் பணியிடங்களை உனடியாக நிரப்ப எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More Click Here