IT Check - Download here
IT Check - Download here
2023-24 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். இந்த தேதிக்குள் உங்கள் ITRஐத் தாக்கல் செய்யத் தவறினால், தாமதமான வருமானத்தை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, தாமதமாக தாக்கல்
செய்யும்போது, கட்டணம் ரூ. 5,000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5
லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம்
ரூ.1,000 ஆக குறைக்கப்படும்.
READ MORE CLICK HERE
வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் வரப்போகிறது. ஏனெனில் 2023 - 24 நிதி ஆண்டுக்கான புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது.
இந்த படிவத்தில் என்ன மாற்றங்கள் வந்துள்ளது என்பதை பார்ப்போம்.
Read More Click here
வருமானவரிக் கணக்கில் உங்கள் கடவுச்சொல்லை ( password) மாற்றம் செய்ய
Income tax returns refilling சில யோசனைகள்:
மார்ச் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பெறும் சம்பளத்தை கணக்கிட்டு அதற்குரிய வருமான வரியை
அட்வான்ஸ் வரியாக ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை பிடித்தம் செய்யப்படுகிறது.
பிடித்தம் செய்யப்படும் தொகை quarter file DDO அவர்களால் செய்யப்படுவதன் மூலம் தொகை அவரவர் Pan numberல் வரவு வைக்கப்படுகிறது.
அவ்வாறு வரவு வைக்கபட்ட உடன் நான் e-filling மூலம் income tax return செய்யலாம். E-filling செய்ய கடைசித் தேதி தான் 31, ஜீலை.
Income returns file செய்யும் போது தான் வருமான வரித்துறைக்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.
பிப்ரவரி மாதம் நாம் தயார் செய்வது வருமான வரி கணக்கிட்டுத்தாள் தான். அது வருமான வரி அலுவலகத்திற்கு செல்வதில்லை.
குறிப்பு: income tax return e-filling நாமே செய்யலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் ரூ 300 முதல் 500 வரை ஆடிட்டரிடம் கொடுத்து பைல் செய்கிறார்கள். அவர்கள்
user name : Pan number
Password: அவர்களாக கொடுத்துக் கொள்கிறார்கள்.( நமது பெயரில் அவர்கள் நமது கணக்கை நிர்வகிக்கின்றனர்).
மேலும் உங்கள் செல் நெம்பருக்கு பதிலாக அவர்கள் செல் நெம்பர் கொடுப்பார்கள்.
இதனால் தான்
1.மூன்று மாதத்திற்கு ஒரு முறை quarter file செய்யும் போது அந்தத் தொகை உங்களுக்கு குறுஞ்செய்தியாக வருவதில்லை.
2. உங்கள் வருமான வரி கணக்கு சம்பந்தமாக வருமான வரித்துறை அனுப்பும் எந்த செய்தி உங்களுக்கு வருவதில்லை.
3. ரிட்டன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டது என்ற குறுஞ்செய்தி வருமான வரித்துறை அனுப்பும். அதுவும் உங்களுக்கு வருவதில்லை.
4. உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தான் நிர்வகிக்க வேண்டும். பிறர் நிர்வகிக்கக் கூடாது. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலே பிறர் தவறாக பயன்படுத்தினாலோ அதற்கு நீங்களே பொறுப்பு.
ஆகையால் உங்கள் வருமான வரி கணக்கு நீங்களே நிர்வக்கிக் password மாற்றம் செய்யுங்கள். அதன்பின் உங்கள் கணக்கை வேறு யாரும் password தெரியாமல் பார்க்க முடியாது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உதவிக்கு
உதுமான் அலி கா
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம்
வாட்ஸ் ஆப் 9790328342
Income Tax Tips - வருமான வரி கணக்கீட்டில் 💯 விலக்கு பெறுவது எப்படி?
HomeINCOME TAX
Income Tax Tips - வருமான வரி கணக்கீட்டில் 💯 விலக்கு பெறுவது எப்படி?
kalvinewsFriday, February 05, 20210 Comments
WhatsAppTelegramCopy LinkTwitterFacebook
Income Tax Tips - வருமான வரி கணக்கீட்டில் 💯 விலக்கு பெறுவது எப்படி?
அனைத்து கழிவுகளும் போக 5,00,010 முதல் 5,05,000 வரை நிகர வருமானம் (Net Taxable Income) வரக்கூடியோர் 13,000 முதல் 14,000 வரை வருமான வரி செலுத்த வேண்டி வரும்.
இதனைக் குறைக்க முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister's Public Relief Fund -CMPRF) 5 இலட்சத்திற்கு மேல் உள்ள,கழிவு தேவைப்படும் தொகையை மட்டும் நிதி அளிக்கலாம்.
அளிக்கும் தொகைக்கு U/S 80 G யின் படி 100% வரிவிலக்கு உண்டு.
இதன் மூலம் நிகர வருமானத்தை 5 இலட்சத்திற்கு கீழ் கொண்டுவந்து வருமான வரி செலுத்துவதை முற்றிலும் தவிர்க்கலாம்.
CM PUBLIC RELIEF FUND
*CMPRF* ஆக செலுத்தும் மிகக் குறைந்த தொகை மட்டுமே செலவு.
மேலும் அளிக்கும் தொகை முழுமையாக தமிழக நிவாரணத்திற்கும் சென்று சேரும்.
நிவாரண நிதியினை *Online* மூலம் செலுத்தி,செலுத்தக் கூடிய நபரின் *பெயர்* மற்றும் *PAN* எண் ஆகியவை அடங்கிய *Receipt* கட்டாயம் பெற வேண்டும்.
தயாரிப்பு
இரா.கோபிநாத்
அனைவருக்கும் பயன்படும் படி பகிர்ந்து உதவுங்கள் நன்றி