தேர்வுத்துறை
இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில்
10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும்
தனித்தேர்வர்கள், டிச.27 (இன்று) முதல் ஜன.10-ம் தேதி வரை கல்வி மாவட்ட
வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவைமையங்களுக்கு சென்று இணையவழியில்
விண்ணப்பிக்க வேண்டும்.