பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.06.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
விளக்கம்:
மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் அறக்கடவுளே எண்ணியவர்க்கு தீமையைத் தர எண்ணும்.