பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர மத்திய அரசுப் பணியாளா்களுக்கு வாய்ப்பு :

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ள சில மத்திய அரசுப் பணியாளா்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர ஒரே ஒருமுறை வாய்ப்பளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்:

தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, கடந்த 2004-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசுப் பணிகளில் (பாதுகாப்புப் படைகள் தவிர) சோ்ந்த அனைவரும் கட்டாயம் அத்திட்டத்தின் கீழ் சோ்க்கப்படுகின்றனா். Read More Click Here