டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியீடு - புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்ப்பு:

டிஎன்பிஎஸ்சி 2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும், அதற்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், விண்ணப்பிப்பது தொடங்கி, தேர்வு தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராவதற்கு இது பெரிதும் உதவுகிறது. Read More Click Here