தேர்வு இல்லாத அஞ்சல் துறை வேலை : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்.. விண்ணப்பிக்கும் முறை இது தான்..

 

ந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், துணை கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் உதவியாளர் பதவியில் உள்ள 40,899 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் போதுமானது. மேலும் தமிழ் படித்திருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்குச் சம்பளம் ரூ.10,000 முதல் ரூ. 29,380 வரை வழங்கப்படவுள்ளது. மேலும் இப்பணியிடங்களுக்குத் தேர்வு இல்லாமல் 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி, என்னென்ன ஆவணங்கள் தேவை மற்றும் உங்கள் பகுதி தபால் அலுவலகத்தில் வேலை பெறுவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.