அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன்: அன்பில் மகேஸ் பொய்யாமொழி :

அரசுப் பள்ளிக்கு நிலத்தை தானமளித்த பூரணம் அம்மாளை வணங்குகிறேன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாளை வணங்குகிறேன்! போற்றுகிறேன்!

மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனியின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.

Read More Click Here