தமிழ்நாட்டில்
20,000 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கவும்,
ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கவும் பள்ளிக்
கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில்
தற்போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என 33 ஆயிரம்
பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நவீன முறையில் கல்வி கற்பிக்க
‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ அமைக்கவும், அத்துடன் இன்டர்நெட் வசதிகளை
ஏற்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

