கோரிக்கைகளை வலியுறுத்தி 28ல் முற்றுகைப்போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு :

கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகைப் போராட்டம் 28ம் தேதி நடக்கும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அரசு அலுவலக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்தனர். முன்னதாக கடந்த 8ம் தேதி முதல்வர் அமைத்த 3 நபர் குழுவினர் மேற்கண்ட சங்கத்தினரை அழைத்துப் பேசினர். அதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. Read More Click Here