தமிழக
அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம்
நிரப்பப்படுகின்றன.
அதன்படி, கடந்த சில மாதங்களில்
நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தகவலை
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: குரூப்-2, 2ஏ பதவிகளில்
காலியாக உள்ள 5,446 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வை தொடர்ந்து, கடந்த
பிப்ரவரியில் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகள் வரும்
டிசம்பரில் வெளியாகும். அதேபோல, குரூப்-1 பதவிகளில் 95 பணியிடங்களுக்கான
முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த ஏப்.28-ம் தேதி வெளியிடப்பட்டன. முதன்மை
தேர்வு ஆக.10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
Read More Click Here