கால்நடை
மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12-ம் தேதி முதல் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை
நடைபெறுகிறது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்
இடஒதுக்கீட்டின்கீழ் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன.
Read More Click Here