திருச்சியைச் சேர்ந்தவர் யோகமலர். சார்பதிவாளரான இவர் 20.7.2020ல்
இறந்தார். இவரது மகன் வினோத்கண்ணா, தனக்கு கருணை அடிப்படையில் வாரிசுப் பணி
வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை
விசாரித்த நீதிமன்றம் அதை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து
வினோத்கண்ணாவின் சகோதரி மகாலட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல்
செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன்
ஆகியோர் விசாரித்தனர். அப்போது இறந்த தாயின் பணப்பலன்களை வினோத் கண்ணா
பெற்றதாகவும், வீடு மற்றும் நிலங்கள் அவருக்கு சொந்தமாக உள்ளதாகவும், அவர்
இறந்த தனது தாயை சார்ந்திருக்கவில்லை என்றும் மகாலட்சுமி தரப்பில்
வாதிடப்பட்டது.
Read More Click Here