குழந்தைகளின் பள்ளி சேர்க்கைக்கான வயது மாற்றம் குறித்த தலையங்கம் :

ஒன்றாம் வகுப்பில் குழந்தையைச் சேர்ப்பதற்கான வயது இப்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. உதாரணத்துக்கு, தமிழகம், புதுதில்லி, ராஜஸ்தான், ஒடிஸô, ஆந்திர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஐந்து வயது நிறைவடைந்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மாணவர் சேர்க்கைக்கான வயது ஆறாக உள்ளது. கர்நாடகம், கோவா போன்ற மாநிலங்களில் 5 வயது 10 மாதம் நிறைவடைந்தவர்கள் முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். Read More Click Here