உடலில் இந்த அறிகுறி இருப்பவர்கள் அசைவ உணவை தவிர்த்திடுங்கள்!

 

பெரும்பாலான மக்களுக்கு அசைவ உணவுகள் பிடிக்கும், அதற்காக அளவுக்கு மீறி சாப்பிடுவது என்பது உடலுக்கு தீங்கினை விளைவிக்கக்கூடும்.

அசைவ உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்றாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகளவு அசைவ உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் அதிக யூரிக் அமிலம், இரத்தத்தில் காணப்படும் கழிவுப் பொருள் தான் யூரிக் அமிலம் ஆகும். பியூரின்கள் எனப்படும் சில இரசாயனங்களை உடல் உடைக்கும்போது இது உருவாகிறது, அதிக யூரிக் அமில அளவு ஹைப்பர்யூரிசிமியா என்று அழைக்கப்படுகிறது. யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் கீல்வாதம் நோய்க்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். Read More Click Here