திரிபுராவில் பழைய ஓய்வூதியத் திட்டம்: பிரகாஷ் காரத் வாக்குறுதி :

 

Prakash-Karat.gif?w=330&dpr=3 

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி இதே வாக்குறுதியை பல மாநிலங்களில் அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசத்தில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது மாநில அரசுக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று துறை சாா்ந்த வல்லுநா்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த வாக்குறுதி தொடா்ந்து வருகிறது. Read More Click Here