புதிய வருமான வரி விதிப்பால் நடுத்தர மக்கள் பலனடைவார்கள்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் :

 

நடுத்தர வகுப்பு மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் புதிய வருமான வரி விதிப்பு முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செலவழிப்பதற்குக் கூடுதலான பணம் மக்களின் கையிருப்பில் இருக்கும். வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளீத்தும் நிதி நிலையை கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஒன்றிய குழுவின், பட்ஜெட்டிற்குப் பிறகு வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று பிப்.11 நடைபெற்றது. அப்போது, பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசாங்கத் திட்டங்கள் மூலம் தனிநபர்களை முதலீடு செய்யத் தூண்டுவது அவசியமில்லை. ஆனால் முதலீடுகள் தொடர்பான தனிப்பட்ட முடிவுகளை எடுக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். Read More Click Here