பிறந்தநாள் பரிசாக Voter ID -சினிமா டிக்கெட் முன்னரே பதிவு செய்து கொள்வது போலவே 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங்:

 

சினிமா டிக்கெட் முன்னரே பதிவு செய்து கொள்வது போலவே 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக தற்போது செய்து கொள்ள முடியும்.

தேசிய வாக்காளர் தின போட்டிகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே பங்கேற்று வெற்றி பெற்ற 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு க்ஷ பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரியும் /மாநகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். Read More Click Here