கொரோனா தொற்றுநோயின்போது உலகமே ஸ்தம்பித்து போயிருந்த நிலையில் பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இதனிடையே சீனாவின் குவாங்சௌ என்ற நகரைச் சேர்ந்த லுவோ என்ற ஓவிய ஆசிரியர்
ஒருவர் ஆன்லைன் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய திரையில் பூனை
தெரிந்த காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன்
மாதத்தில் ஆன்லைன் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போது அவர் வளர்க்கும்
பூனை கேமராவில் தெரிந்துள்ளது. இதனால் வகுப்பு எடுக்கும்போது பூனை திரையில்
தோன்றியதற்காகவும், அதற்கு முந்தைய வகுப்புக்கு 10 நிமிடங்கள் தாமதாக
வந்தற்காகவும், ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்ற கல்விசார் தொழில்நுட்ப
நிறுவனம் ஒன்று லூவை பணியிலிருந்து நீக்கியிக்கிறது.
Read More Click Here