சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த 15 வயது மாணவி அரசு பெண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவன் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்து
வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவி கழிவறையில் ரத்தத்தால் 'ஸாரி
அம்மா' என எழுதியதுடன், பேனாவால் உடலை கீறிக் கொண்டார். பின்னர், பள்ளியின்
2வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த
ஆசிரியர்கள், அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Read More Click Here


