2006
மற்றும் 2007ம் ஆண்டுகளில் அரசுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500
பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம்
அவகாசம் வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு
பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால்,
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு,
விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து 2010ம் ஆண்டு ஆகஸ்ட்
26ஆம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு
நியமிக்கப்படவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More Click here