பல்கலையில் விடைத்தாள் திருத்தும் முகாம் ரத்து :

 மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட 77 கல்லுாரிகளில் கடந்த மாதம் நடத்திய ஆன்லைன் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த கல்லுாரிகளிலேயே திருத்த உத்தரவிடப் பட்டுள்ளது. வழக்கமாக பல்கலையில் நடக்கும் விடைத்தாள் திருத்தும் முகாம் இந்தாண்டு கொரோனா இரண்டாம் அலை தொற்று அச்சத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.கல்லுாரிகளுக்கு பல்கலை தேர்வாணையர் தர்மராஜ் அனுப்பிய உத்தரவில், வாகனங்களில் விடைத்தாள்களை சேகரிக்கும் பணி ரத்து செய்யப்படுகிறது. பல்கலையில் நடக்கும் முகாமிற்கு பதில் அந்தந்த கல்லுாரிகளிலேயே பாடம் வாரியாக விடைத்தாள்களை திருத்தி அதற்கான மதிப்பெண்ணை பல்கலைக்கு அனுப்பி வைக்க வேண்டும்&' என தெரிவித்துள்ளார்.