தேர்தல் நாளன்று இவ்வளவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளா ? சூப்பர் !

 

தேர்தல் நாளன்று மேற்கொள்ள இருக்கின்ற தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

1. 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'BIO MEDICAL WASTE BIN' தேர்தல் பொருட்களுடன் வழங்கப்படும்.

2. வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தன்னார்வலர்களில் ஒருவர் வாக்குச்சாவடிக்கு வரும் அனைத்து வாக்காளர்களின் வெப்ப நிலையையும் INFRARED THERMAL SCANNER மூலம் ஆய்வு செய்து HAND SANITIZER  (500 ml) மூலம் SPRAY செய்யும் பணியை மேற்கொள்வார்.

3.  மற்றொருவர் வாக்குச்சாவடி நுழைவாயிலில் முகக் கவசம் அணியாமல் வரும் வாக்காளர்களுக்கு முகக்கவசம் வழங்குவார்.

4. அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்கு செலுத்தும் போது DISPOSABLE POLYTHENE HAND GLOVE ஒரு கைக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும். வாக்காளர் வாக்கு செலுத்திய பின் அதனை மஞ்சள் நிற BIO MEDICAL WASTE BINல் போட வேண்டும்.

5. வாக்குச்சாவடி அலுவலர்கள் FACE SHIELD அணிந்துகொள்ள வேண்டும்; அவ்வப்போது தங்கள் கைகளை HAND SANITIZER மூலம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்; RUBBER HAND GLOVES அணிந்துகொள்ள வேண்டும்.குறிப்பிட்ட இடைவெளியில் புதிய GLOVES பயன்படுத்த வேண்டும். SURGICAL FACE MASK அணிந்து கொண்டு குறிப்பிட்ட இடைவெளியில் புதிய மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.