கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள் - நாள்: 02.09.2024
👇👇👇
Kalaithiruvizha - Guidance - 02.09.2024 - Download here
*02.09.2024 கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல்கள்
வகுப்பு 1 முதல் 12 வரை பள்ளி அளவில் நடத்தும் போட்டிகளை வீடியோ எடுத்திடல் வேண்டும். EMIS இணையதளத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் வீடியோக்களை மட்டும் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் வகுப்பறைகளில் உள்ள கரும்பலகையில் கீழ்காணும் விவரங்கள் கண்டிப்பாக எழுதப்பட வேண்டும். இவ்விவரங்கள் வீடியோவில் பின்புலத்தில் காணப்பட வேண்டும். வீடியோவினை landscape mode -ல் எடுத்திடல் வேண்டும்.
1. கலைத் திருவிழா 2024 - 2025
2. பள்ளியின் பெயர்
3. UDISE CODE
4. மாவட்டம்
5. ஒன்றியம்
6. போட்டியின் தலைப்பு
7. வகுப்பு
8. நாள்
*போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் EMIS NO, வகுப்பு, போட்டியின் பெயர் விவரம் அடங்கிய அடையாள அட்டை அணிந்திருத்தல் வேண்டும்.
கரும்பலகையில் எழுதப்பட்ட தகவல்கள் 10 seconds மற்றும் மாணவரின் அடையாள அட்டையினை 10 seconds zoom செய்து எடுத்தபின் போட்டியினை கைகளை அசைக்காமல் நேராக வைத்து எடுக்கவும்.
ஒளியமைப்பு மாணவர்களுடைய முகத்தில் படுமாறு எடுக்க வேண்டும். அவர்களின் தலைக்கு பின்னால் இருந்து வெளிச்சம் வருவது போல் எடுக்க வேண்டாம்.
ஒலியமைப்பை ஒரு முறை பரிசோதித்த பின்னர் படப்பதிவு செய்திடவும்.
சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ள கால அளவுக்குள் எடுத்திடல் வேண்டும். அதிக கால அளவில் வீடியோ இருந்தால் பதிவேற்றம் ஆகாது.
மாணவர் படைப்புகளை எடிட் செய்து பதிவேற்றம் செய்தல் கூடாது.
90 மற்றும் 60 நிமிடப் போட்டிகளை மட்டும் கீழ்க்காணும் வகையில் வீடியோ எடுத்திடல் வேண்டும்.
1. செயல்பாட்டின் தொடக்கத்தில்
2. செயல்பாட்டின் இடையில்
3. செயல்பாட்டின் முடிவில்
என ஐந்து நிமிடம் இருக்குமாறு வீடியோ எடுத்திடல் வேண்டும்.