பள்ளிக்கல்வி
 இயக்குநர் அவர்கள் செயல்முறையின் படி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 
தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 10 நாட்கள் 
அகப்பயிற்சியினை ( Internship ) மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.
 அதற்கான
 நிதி பார்வை 2 யிலுள்ள இவ்வலுவலகக் கடிதத்தின் படி அனைத்து 
மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது . பார்வை 1 யிலுள்ள செயல்முறையில் 
தெரிவிக்கப்பட்டதின்படி அகப்பயிற்சியினை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கு 
ஊக்கத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என 
தெரிவிக்கப்பட்டது.
 அதன்படி அகப்பயிற்சி நிறைவு 
செய்த ஒவ்வொரு மாணவருக்கும் ரூ .1000 / - ஊக்கத்தொகையாக அவர்கள் வங்கி 
கணக்கில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதற்காக அகப்பயிற்சி நிறைவு செய்த
 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு விவரம் பெறப்பட வேண்டும். 
மாணவர்களின் வங்கிக்கணக்கு விவரம் மற்றும் அகப்பயிற்சிக்கு சென்ற 
தொழிற்சாலைகள் / நிறுவனங்கள் வழங்கிய சான்றிதழ்களை tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் பதிவேற்றம் செய்வதற்கான வழிவகை 1 செய்யப்பட்டுள்ளது.
 இவ்விவரங்களை ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் tnemis.tnschools.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் . பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
SPD Proceedings - 
Download here..


 

 
 
