மதுரையில்
பள்ளிக்கு சொந்த நிலம் 1.52 ஏக்கரை வழங்கிய கொடிக்குளத்தைச் சேர்ந்த
பூரணம் அம்மாளுக்கு குடியரசு தினத்தில் முதல்வரின் சிறப்பு விருது
வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு:
கல்விதான்
உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு
தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட்
நிலத்தை அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக மதுரை
கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்ற பூரணம் கொடையாக அளித்துள்ளார்.
Read More Click here


