போட்டித் தேர்வு மையங்களின் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு:

 

தமிழக அரசின் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதாவது, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில்500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. APPLY CLICK HERE