பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து, நாகையை சேர்ந்த ஆசிரியையை நீக்க, பள்ளிக் கல்வித்துறை கமிஷனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்த வி.கே.கவிதா என்பவர் தாக்கல் செய்த மனு:
அரசு உதவி பெறும் சுந்தரம் தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக, 2003 ஏப்., 29ல் நியமிக்கப்பட்டேன். பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, 2003 ஏப்., 1ல் அரசு அறிவித்தது. ஆனால், அந்த ஆண்டு ஆக.,6ல் தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.