தமிழகம்
முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க
திட்டத்தை, திருக்குவளையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த
பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில்
உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும்,
ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப்
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று
சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே
7-ம் தேதி அறிவித்தார். முதலில் இத்திட்டம், சென்னை மாநகராட்சி பள்ளிகள்,
தொலைதூரகிராமங்களில் உள்ள பள்ளிகளில் தொடங்கப்படும். பின்னர், படிப்படியாக
அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.


