இந்திய
அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான
(GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த
பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம்
வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட
உள்ளனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.