மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்ரன்(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.
பலன்கள்: இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தவர் சுமத்திய வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் அகலும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சுக்கிரனுடைய சஞ்சாரத்தால் பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள்.