வருமான வரி கணக்கு தாக்கல்.... 31-ம் தேதிக்குள் செய்யாவிட்டால்..?

 


ந்த மாதத்தின் கடைசி நாளான 31-ம் தேதிக்குள் அனைவரும் தங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும்.

இதைச் செய்யாவிட்டால், ரூ.5,000 அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் சிறை என்கிற நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும்!

நாட்டின் குடிமகன்கள் அனைவரும் தாங்கள் ஈட்டிய வருமானத்துக்குரிய வரியைக் கட்டியாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மக்கள் தரும் வரிப் பணத்தைக் கொண்டுதான் அரசாங்கங்கள் பல்வேறு நலத் திட்டங்களை வெற்றிகரமாக நடத்துகின்றன. இத்தனை முக்கியமான வேலையைக் கடைசி நாள் வரை ஒத்திவைப்பது சரியல்ல. காரணம், கடைசி நேரத்தில் பலரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்பட்டால், வருமான வரித் துறையின் இணையதளம் முடங்க வாய்ப்புண்டு. அதனால் கடைசி தேதிக்குள் வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாமலே போய், தேவை இல்லாமல் ரூ.5,000 வரை அபராதம் கட்ட வேண்டிய நிலை ஏற்படலாம்!
 
Read More Click here