இவர்களுக்கெல்லாம் ரூ. 1000 உரிமைத்தொகை கிடையாது? - ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்?

குதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டி உள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி படி, வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று, குடும்பத் தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், தகுதியான பயனாளிகள் யார் என்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Read More Click Here