வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது

 

சென்னை: வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது.

வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டே வருகிறது. ஜூலை மாதம் என்பதால் இந்தியா முழுக்க பலரும் வருமான வரி கணக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்து வருகின்றனர்.

ஜூலை 31 காலக்கெடுவை நீட்டிக்க நிதி அமைச்சகம் பரிசீலிக்காததால், வருமான வரி செலுத்துவோர் விரைவில் கணக்கு தாக்கல் செய்யுமாறு வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 5.83 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Read More Click Here