சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியதாவது: மாணவர்கள் இடைநிற்றலை கண்காணிக்க இந்தஆண்டு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.
அதன்படி,எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றுபாலிடெக்னிக், ஐடிஐ செல்பவர்களுக்கு, பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள எமிஸ் எண்ணைக் கொண்டு சேர்க்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம், எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள் எந்தெந்த படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்ற விவரம் கிடைக்கும். கல்வியைதொடராத இடைநிற்றல் மாணவர்களை அடையாளம் காண்பதும் எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


