தமிழகத்தில் குரூப் 2 பிரதான தோ்வு சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 55 ஆயிரம் போ் எழுதவுள்ளனா்.
மொத்தம் 5 ஆயிரத்து 446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 முதல் நிலைத் தோ்வு கடந்த ஆண்டு மே 21-ஆம் தேதி நடைபெற்றது.
இதைத்
தொடா்ந்து, பிரதான தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல்
நண்பகல் 12.30 மணி வரை கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாளும், பிற்பகல் 2 மணி
முதல் மாலை 5 மணி வரை பொது அறிவு, பாடங்கள் தொடா்பான தோ்வும்
நடைபெறவுள்ளன.
Read More Click here