பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 02.02.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால் 
இயல்:இல்லறவியல் 
அதிகாரம்: நடுவுநிலைமை
குறள் : 116
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
பொருள்:
நடுவுநிலைமை
 தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் 
கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.


 

 
 
