பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 22.12.2022

திருக்குறள் :

பால்: அறத்துப்பால் 

இயல்: இல்லறவியல். 

அதிகாரம்:இனியவை கூறல் 

குறள்:93 

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் 
ஆம் இன்சொ லினதே அறம். 

பொருள்

கண்டவுடன் முகமலர்ச்சியுடன் பார்த்து பேசி, உள்ளன்புடன் பழகுவதே நல்லறமாகும்.