தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி. முதலிடம் பிடித்து சாதனை. அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு.!!


தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசின் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கமாகும். இந்த தேர்வை உயர்நிலை, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 8 - ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் நான்கு வருடம் 48000 ஊக்கத் தொகையானது அவரவர் வங்கி கணக்கில் மத்திய அரசில் இருந்து செலுத்தப்படும்.

தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான திறனாய்வு தேர்வு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 313 மாணவர்கள் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவுடையாபுரம் அரசு பள்ளி மாணவியான முத்து கீர்த்தனா என்பவர் இந்த தேர்வில் முதலிடம் பிடித்து மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவியை அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பல ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.