தமிழகத்தில் கூட்டுறவு வங்கி நகைக்கடன் ரத்து அரசாணை – விரைவில் வெளியீடு!!
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள 5 சவரன் நகைகளுக்குக்கான கடன் தள்ளுபடி செய்ய அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் மே மாதம் 7 ஆம் தேதி புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அதற்கு முன்னதாக திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான சிறந்த நலத்திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக அவர் வாக்குறுதி அளித்தார். அதன்படி அவர் ஆட்சி பொறுப்பேற்ற அன்றே 5 முக்கிய திட்டங்களை அமல்படுத்த கையெழுத்திட்டார்.
மேலும் முன்னதாக கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவி குழு கடன் ரத்து செய்யப்படும் எனவும், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதே போல திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன், விவசாய கடன் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் ரத்து செய்ய விரைவில் அரசாணை வெளியிடப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகளின் 6 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது 5 சவரன் நகை கடன் ரத்து செய்ய அரசாணை வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


