பள்ளிக்கல்வி- 2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கு 11ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கை- 9ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளி அளவிலான மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் குறித்து-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
பள்ளிக்
கல்வியில் 10 ஆம் வகுப்பு முடித்து மேல்நிலைக்கல்வி பயில்வதற்கும் ,
பல்தொழில் நுட்பக்கல்லூரிகள் , ( Polytechnic Colleges ) தொழிற்பயிற்சி
நிறுவனங்கள் ( Industrial Training Institutes ) மற்றும் பிற மேற்படிப்பு
நிறுவனங்களில் சேருவதற்கும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
அவசியமாகிறது . தற்போது 2021-22ம் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில் சேர உள்ள
மாணவர்கள் , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் 2019-2020ஆம் கல்வியாண்டில்
ஒன்பதாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வும் நடைபெறாத நிலையில் 11 ஆம் வகுப்பு
மற்றும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கைப் பணிக்காக
மட்டும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்பட்டியல் அளிக்க கீழ்க்காணும் வழிகாட்டு
நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
1. 2019-2020ஆம்
கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் காலாண்டு மற்றும்
அரையாண்டு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் எந்த
தேர்வில் அவர்கள் அதிகப்படியான மதிப்பெண்ணை பெற்றுள்ளார்களோ அம்மதிப்பெண்ணை
( The maximum mark scored in each subject either in Quarterly or Half
-yearly examinations ) கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்
2.
காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இரண்டிலும் கலந்து கொண்டு எந்த
பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ அந்த பாடத்திற்கு குறைந்தபட்சதேர்ச்சி
மதிப்பெண்கள் ( 35 ) வழங்கலாம்
3. காலாண்டு
மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இரண்டிற்கும் வருகை புரியாத மாணவர்களுக்கு (
Absentees ) குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் ( 35 ) வழங்கலாம்
4.
காலாண்டுத் தேர்வுகள் அல்லது அரையாண்டுத் தேர்வுகளில் பங்கு பெற்று
ஏதேனும் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த மதிப்பெண்ணை
கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் . எனவே , மேற்குறிப்பிட்ட நெறிமுறைகளை
முறையாகப் பின்பற்றி மதிப்பெண்பட்டியலை வழங்கி , அதனடிப்படையிலும்
நடைமுறையில் உள்ள பிற விதிகளையும் பின்பற்றி 11 ஆம் வகுப்பு மாணவர்கள்
சேர்க்கை நடத்திடுமாறு , அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் / பள்ளி
முதல்வர்களுக்கும் தெரிவித்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் , 2020-21ஆம்
கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் பார்வை -1 ல்
கண்ட அரசாணைப்படி 10 ஆம் வகுப்பிற்கான தேர்ச்சி சான்றிதழ் ( Pass
Certificate ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் வழங்கப்படும்.