கோவிட் பரவலால் பிளஸ்2 பொதுத் தேர்வுகளை நடத்தாமல் ரத்து செய்ய உத்தரவிட
வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 31-ம் தேதி
விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர்
மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில்
கோவிட்19 பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பிளஸ்2 தேர்வுகளை
நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாகத் தேர்வு
மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது. இந்த
தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப் போடுவதும்; முடிவு ஏதும் எடுக்காமல்
இருப்பதும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும்பட்சத்தில்
அது அவர்களது கல்வியை பாதிக்கும்.
10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து
செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல்
இருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும். அதனால், பிளஸ்2
வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ
வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
