இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. இந்த பாதிப்பு வேகமெடுத்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த பணிகளில் பிரதமர் நரேந்திர மோடி தனி கவனம் செலுத்தி வந்தார்.
இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும் :
குறிப்பாக மாநில முதலமைச்சருடன் அடிக்கடி கலந்துரையாடல் நடத்தி அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரானவுடன் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் உலக முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. அப்போதும், மாநில முதலமைச்சர்கள் காணொலிக் காட்சி மூலம் சந்தித்தார் பிரதமர் நரேந்திரமோடி, தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
PG TRB ALL SUBJECT STUDY MATERIALS CLICK HERE
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதேபோல் நாடு முழுவதும் தடுப்புசி பணிகளும் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வகையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் மாநில முதலமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலவரங்களை கேட்டிருக்கிறார். தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்கிறார்.