கலையில் எழும் போது உடலின் பல பகுதிகளில் உங்களுக்கு வலி இருந்தால் அதற்க்கு முக்கிய காரணம் தவறான நிலையில் தூங்கினதுதான், இரவில் நாம் பகல் முழுவதும் உழைத்துவிட்டு படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் நிம்மதி வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. அப்படி தூங்கும்போது சரியான நிலையில் தூங்குகிறோமா???
இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.
ஒருவரின் தூங்கும் நிலை தான் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று. நாள் ஒன்றுக்கு தவறான நிலையில் 8 மணிநேரம் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு பெறாமல், வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை அதன் விளைவாக உண்டாக்கும் என்பதால் இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது மிக முக்கியம். கால்களுக்கு இடையே ஒரு உறுதியான தலையணையை நீங்கள் வைத்து தூங்குவதால் தூக்கம் விரைவாக வருவதோடு உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்குகிறது.
கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைப்பதால் நல்ல ஆறுதல் தருவதோடு முழங்கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் காலில் இருக்கும் அழுத்தம் நீக்குகிறது. தலையனை உங்கள் முழங்கால்களில் இருந்து கணுக்கால் வரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுவதால் முழங்கால்கள் மற்றும் கணுக்கால் ஒரே நிலையில் இருப்பதால் சீராக தூக்கம் வரும். மேலும், இப்படி தூங்குவதால் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை எளிதாக்க உதவுவதோடு இரத்த ஓட்டத்தை சீராக்கி, உறுப்புகள் சரியாக செயல்பட உதவி செய்வதோடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படி கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதால் இடுப்பில் உள்ள அழுத்தம் குறைவதோடு முதுகெலும்புகள் நகர்வதை தடுத்து முதுகு வலியை குறைக்கும்.